ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாஹிப்கஞ்ச் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாயினர். பயணிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கரன்பூர் அருகே தில்லியை நோக்கிச் சென்ற பிரம்மபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக் கொண்டன.
சரக்கு ரயிலின் இஞ்சின் பழுதாகி நின்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. திப்ரூகரில் இருந்து தில்லி நோக்கி வந்த பிரம்மபுத்திரா ரயிலின் ஒரு பெட்டியும் தடம் புரண்டது.

0 comments:
Post a Comment